உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்தசிறுகரு நெய்தற் கண்போல் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின் வைஎயிற்று,
மைஈர்ஓதி, வாள் நுதல் குறுமகள்! 5
விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த
புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு,
மனைபுறந் தருதி ஆயின், எனையதூஉம்,
இம்மனைக் கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ , மாத ராய்?' எனக் 5
கடும்பரி நல்மான், கொடிஞ்சி நெடுந்தேர்
கைவல் பாகன் பையென இயக்க,
யாம்தற் குறுகினமாக ஏந்தெழில்
அரிவேய் உண்கண் பனிவரல் ஒடுக்கிச்
சிறிய இறைஞ்சினள், தலையே-
பெரிய எவ்வம் யாமிவண் உறவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework