நெடுவேள் மார்பின் ஆரம் போலச்செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப,
எல்லை பைப்பய கழிப்பிக், குடவயின்
கல்சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு - 5
மதர்எழில் மழைக்கண் கலுழ, இவளே
பெருநாண் அணிந்த நறுமென் சாயல்
மாண்நலம் சிதைய ஏங்கி, ஆனாது
அழல்தொடங் கினளே - பெரும;- அதனால்
கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி 10
நெடுநீர் இருங்கழி பரிமெலிந்து அசைஇ,
வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ -
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தல்எம் பெருங்கழி நாட்டே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework