மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர்வினை
வளம்கெழு திருநகர் புலம்பப் போகி,
வெருவரு கவலை ஆங்கண், அருள்வரக், 5
கருங்கால் ஓமை ஏறி, வெண்தலைப்
பருந்து பெடைபயிரும் பாழ்நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச், சேவடிச்
சிலம்புநக இயலிச் சென்றஎன் மகட்கே-
சாந்துஉளர் வணர்குரல் வாரி, வகைவகுத்து 10
யான்போது துணைப்பத், தகரம் மண்ணாள்,
தன்ஓ ரன்ன தகைவெங் காதலன்
வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச்
சிறுபுறம் புதைய நெறிபுதாழ்ந் தனகொல்-
நெடுங்கால் மாஅத்து ஊழுறு வெண்பழம் 15
கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம்நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework