பின்னொடு முடித்த மண்ணா முச்சிநெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ;
வெருகுஇருள் நோக்கி யன்ன கதிர் விடுபு
ஒருகாழ் முத்தம் இடைமுலை விளங்க,
அணங்குறு கற்பொடு மடம்கொளச் சாஅய், 5
நின்நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
'என்ஆகுவள்கொல், அளியள் தான்?' என,
என்அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறுஅன்று என்னா வேறுஅல் காட்சி
இருவேம் நம்படர் தீர வருவது 10
காணிய வம்மோ - காதல்அம் தோழி!
கொடிபிணங்கு அரில இருள்கொள் நாகம்
மடிபதம் பார்க்கும், வயமான் துப்பின்,
ஏனல்அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி 15
விடுபொறிச் சுடரின் மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework