வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் 5
ஆகொள் வயப்புலி ஆகும் அஃது" எனத்தம்
மலைகெழு சீறூர் புலம்பக், கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சுஅமர் வியன்மார்பு உடைத்துஎன அன்னைக்கு
அறிவிப் பேம்கொல்? அறியலெம் கொல்?' என 10
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற்
சேர்ந்தன்று - வாழி, தோழி!- 'யாக்கை
இன்உயிர் கழிவது ஆயினும், நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்' எனச் செய்யா தீமே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework