"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனிபசந் தனள்" என வினவுதி; அதன்திறம்
யானும் தெற்றென உணரேன்; மேல்நாள்,
மலிபூஞ் சாரல், என்தோழி மாரோடு 5
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
"புலிபுலி!" என்னும் பூசல் தோன்ற-
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், 10
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
"யாதோ, மற்று அம் மாதிறம் படர்?" என
வினவிநிற் றந்தோனே. அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்மறைபு ஒடுங்கி 15
நாணி நின்றனெ மாகப், பேணி,
"ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
மைஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?" என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, 20
நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற அக் குன்றுகிழ வோனே!
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன்மறை தேஎம்நோக்கி, "மற்றுஇவன்
மகனே, தோழி!" என்றனள்
அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework