மெய்யின் தீரா மேவரு காமமொடுஎய்யாய் ஆயினும், உரைப்பல் - தோழி!
கொய்யா முன்னும், குரல்வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே; நீயே, 5
முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணி,
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள்விளி இடைஇடை பயிற்றி 10
ஆங்காங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
'சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள்' எனப்,
பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework