கொடுவரி இரும்புலி தயங்க நெடுவரை
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
"கொடுவரி இரும்புலி தயங்க நெடுவரைஆடுகழை இருவெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம்அழ,
நின்றதுஇல் பொருட்பிணிச் சென்றுஇவண் தருமார்,
செல்ப" என்ப, என்போய்! நல்ல 5
மடவை மன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை,
மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கைஅம் பெருந்துறை முத்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய் 10
தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே - தேம்படத்
தெள்நீர்க்கு ஏற்ற திரள்காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா பருந்துபட
வேந்துஅமர்க் கடந்த வென்றி நல்வேல் 15
குருதியொடு துயல்வந் தன்னநின்
அரிவேய் உண்கண் அமர்த்த நோக்கே?