வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇஇளையோர் செல்ப எல்லும் எல்லின்று
அகலிலைப் புன்னைப் புகர்இல் நீழல்
பகலே எம்மொடு ஆடிஇரவே
காயல் வேய்ந்த தேயா நல்லில் 5
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை
அருங்கடிப் படுவலும்' என்றி; மற்று 'நீ
செல்லல்' என்றலும் ஆற்றாய் 'செலினே
வாழலென்' என்றி ஆயின் ஞாழல்
வண்டுபடத் ததைந்த கண்ணி நெய்தல் 10
தண்ணரும் பைந்தார் துயல்வர அந்திக்
கடல்கெழு செல்வி கரைநின் றாங்கு
நீயே கானல் ஒழிய யானே
வெறிகொள் பாவையிற் பொலிந்தஎன் அணிதுறந்து
ஆடுமகள் போலப் பெயர்தல்
ஆற்றேன் தெய்ய அலர்கவிவ் வூரே!