மதவலி யானை மறலிய பாசறைஇடிஉமிழ் முரசம் பொருகளத்து இயம்ப
வென்றுகொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
கறவைப் பல்லினம் புறவுதொறு உகளக்
குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்து 5
இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக்
கடுநடைப் புரவி வழிவாய் ஓட
வலவன் வள்புவலி உறுப்பப் புலவர்
புகழ்குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
தண்கமழ் சாந்தம் நுண்துகள் அணிய 10
வென்றிகொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டுஉறை வதுகொல் தானே...மாண்ட
போதுஉறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திருநுதற் பசப்பே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework