முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடிமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடுமயில் முன்னது ஆகக் கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை 5
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிரும் குன்ற நாடன்
குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடுநா மொழியலனஅன்பினன்' என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் 10
நல்லை காண் இனிக்- காதல் அம்தோழீஇ!-
கடும்பரி புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயம்வரு பனுவல்
தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணின் னுள்ளும் 15
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework