பெரும்பெயர் மகிழ்ந! பேணா தகன்மோ!பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட
ஆர்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயற் 5
கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்றுநின் செம்மல்? மாண்ட
மதியேர் ஒள்நுதல் வயங்கிழை ஒருத்தி- 10
இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்ணறுங் கமழ்தார் பரீஇயினள் நும்மொடு
ஊடினள்- சிறுதுனி செய்தெம்
மணன்மலி மறுகின் இறந்திசி னோளே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework