சிலம்பிற் போகிய செம்முக வாழைஅலங்கல் அம்தோடு அசைவளி யுறுதொறும்
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
நல்வரை நாடனொடு அருவி ஆடியும்
பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும் 5
நறுவீ வேங்கை இனவண் டார்க்கும்
வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும்
அரிய போலும்- காதல்அம் தோழி!-
இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்பென கவினிய பெருங்குரல் ஏனல் 10
கிளிபட விளைந்தமை யறிந்தும் 'செல்க' என
நம்மவண் விடுநள் போலாள் கைம்மிகச்
சில்சுணங் கணிந்த செறிந்துவீங் கிளமுலை
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு
பல்கால் நோக்கும்- அறனில் யாயே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework