கோதை இணர குறுங்கால், காஞ்சிப்போதுஅவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்,
அரிமதர் மழைக்கண், மாஅ யோளொடு
நெருநையும் கமழ்பொழில் துஞ்சி, இன்றும்,
பெருநீர் வையை அவளொடு ஆடிப், 5
புலரா மார்பினை வந்துநின்று, எம்வயின்
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்
பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார்அரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேர்இசை கொற்கைப் பொருநன், வென்வேல் 10
கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்,
மலைபுரை நெடுநகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர்ஆ கின்று, அது பலர்வாய்ப் பட்டே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework