விசும்பு விசைத்துஎறிந்த கூதளங் கோதையிற்பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்பப்,
புலம்புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்,
நலம்கவர் பசலை நலியவும், நந்துயர் 5
அறியார் கொல்லோ தாமே? அறியினும்,
நம்மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ?
யாங்கென உணர்கோ, யானே?- வீங்குபு
தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு 10
முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை,
ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம் 15
நிலவரை எல்லாம் நிழற்றி,
அலர்அரும்பு ஊழ்ப்பவும், வாரா தோரே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework