உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவின்று ஆகி,
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்,
கோடுஉயர் திணிமணல் அகன்துறை, நீகான் 5
மாட ஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
கழியா மையே, அழிபடர் அகல,
வருவர் மன்னால்- தோழி!- தண்பணைப்
பொருபுனல் வைப்பின் நம்ஊர் ஆங்கண் 10
கருவிளை முரணிய தண்புதல் பகன்றைப்
பெருவளம் மலர அல்லி தீண்டிப்,
பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க,
அறன்இன்று அலைக்கும் ஆனா வாடை 15
கடிமனை மாடத்துக் கங்குல் வீசத்,
'திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய,
நிரைவளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework