நுதல்பசந் தன்றே; தோள்சா யினவே;திதலை அல்குல் வரியும் வாடின;
என்ஆ குவள்கொல் இவள்?' எனப் பல்மாண்
நீர்மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
இனையல்- வாழி, தோழி!- நனை கவுள் 5
காய்சினம் சிறந்த வாய்புகு கடாத் தொடு
முன்னிலை பொறாஅது முரணிப், பொன்னிணர்ப்
புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப,
முதல்பாய்ந் திட்ட முழுவலி ஒருத்தல்
செந்நிலப் படுநீறு ஆடிச், செருமலைந்து, 10
களம்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பலஇறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
நோய்இல ராக, நம் காதலர்!- வாய்வாள்,
தமிழ் அகப் படுத்த இமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெருநாள் இருக்கை, 15
தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்.
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, 20
எல்லுமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework