எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்பொரிஅகைந் தன்ன பொங்குபல் சிறுமீன்,
வெறிகொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபுவந்து இருக்கும்
துறைகேழ் ஊரன் பெண்டுதன், கொழுநனை 5
நம்மொடு புலக்கும் என்ப - நாம்அது
செய்யாம் ஆயினும் உய்யா மையின்,
செறிதொடி தெளிர்ப்ப வீசிச், சிறிதுஅவண்
உலமந்து வருகம் சென்மோ - தோழி!-
ஒளிறுவாட் டானைக் கொற்றச் செழியன் 10
வெளிறுஇல் கற்பின் மண்டுஅமர் அடுதொறும்
களிறுபெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர், தன் வயிறே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework