நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்பயன்இன் மையின் பற்றுவிட்டு, ஒரூஉம்
நயன்இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப்பூ நீத்துச், சினைப்பூப் படர,
மைஇல் மான்இனம் மருளப், பையென 5
வெந்துஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல்இரு வானம் அம்மஞ்சு ஈனப்,
பகல்ஆற்றுப் படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, 10
ஆர்அஞர் உறுநர் அருநிறம் சுட்டிச்
கூர்எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள்அற இயற்றிய அழல்காண் மண்டிலத்து
உள்ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் - பெரிது அழிந்து, 15
இதுகொல் - வாழி, தோழி! என் உயிர்
விலங்குவெங் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework