நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம்புலங்கடை மடங்க தெறுதலின், ஞொள்கி,
"நிலம்புடை பெயர்வது அன்றுகொல், இன்று?" என
மன்உயிர் மடிந்த மழைமாறு அமையத்து,
இலைஇல ஓங்கிய நிலைஉயர் யாஅத்து 5
மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில்இட,
நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை அடூஉக் கழிந்தன்ன
புண்உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 10
கண்உமிழ் கழுகின் கானம் நீந்திச்,
'சென்றார்' என்பு இலர் -தோழி!- வென்றியொடு
வில்இலைத்து உண்ணும் வல்ஆண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே