ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணே
அறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1
காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணே
நேத்துவந்தவன் கொண்டுபோனான் -சுண்டெலிப்பெண்ணே 2

அதனாலேதான் பயமாஇருக்கு -சுண்டெலிப்பெண்ணே
அக்கம்பக்கம் போகாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 3

கண்ணடிக்கிற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கண்ணெடுத்துப் பார்க்கேதேடி ©சுண்டெலிப்பெண்ணே 4

கடைக்குப்போற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கையலைப் பழைக்காதடி -சுண்டெலிப்பெண்ணே 5

காவாலிப் பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
காலாட்டிக்கிட்டு நிற்காதடி -சுண்டெலிப்பெண்ணே 6

நெற்றியிலே பொட்டுவைச்சு -சுண்டெலிப்பெண்ணே
நெருங்கிநிண்ணு பேசாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 7

புருவத்திலே மையைவச்சு -சுண்டெலிப்பெண்ணே
பொய்ஒண்ணுமே சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 8

ஜோட்டிலே மாட்டல்வச்சு -சுண்டெலிப்பெண்ணே
ஜோக்குநடை நடக்காதேடி -சுண்டெலிப்பெண்ணே 9

வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச்-சுண்டெலிப்பெண்ணே
வெறும்பயலைப் பார்க்கேதேடி -சுண்டெலிப்பெண்ணே 10

புகையிலையைப் போட்டுக்கிட்டுச் -சுண்டெலிப்பெண்ணே
பொடிப்பயலைப் பார்க்கதடி சுண்டெலிப்பெண்ணே 11

வாறவனையும் போறவனையும் -சுண்டெலிப்பெண்ணே
வழிமறிச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 12

சந்தைக்குப்போற சனங்களைநீ -சுண்டெலிப்பெண்ணே
ஜாடைப் பேச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 13

சலுக்காரு ரோட்டிலேநீ -சுண்டெலிப்பெண்ணே
சண்டைகிண்டை போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 14

பக்கத்துவீட்டுப் பெண்களைச் -சுண்டெலிப்பெண்ணே
பரிகாசம்நீ பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 15

இடுப்புச் சிறுத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
இறுமாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 16

மண்டை பெருத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
தண்டுமுண்டு பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 17
விரிச்சநெற்றிக் காரியே -சுண்டெலிப்பெண்ணே
வீறாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 18

இரும்புநெஞ்சு படைத்த -சுண்டெலிப்பெண்ணே
குறும்புபொண்ணும்நீ செய்யாதேடி -சுண்டெலிப்பெண்ணே 19

மயிர்சுருண்டு நீண்டுவளர்ந்த -சுண்டெலிப்பெண்ணே
மரியாதைகெட்டுத் திரியாதேடி -சுண்டெலிப்பெண்ணே 20

உருட்டிஉருட்டி முழிக்கும் -சுண்டெலிப்பெண்ணே
திருட்டுத்தனம் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 21

உதட்டழக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
ஒருத்தரையும் வையாதேடி -சுண்டெலிப்பெண்ணே 22

கிளiமூக்குக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கிரித்துவரும் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 23

பல்வரிசைக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
பழிஇழுத்துப் போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 24

குறுங்கழுத்துக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கோள்குண்டுணி சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 25

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework