சிட்டே சிட்டே பறந்து வா! சிறகை சிறகை விரித்து வா! கொட்டிக் கிடக்கும் மணிகளைக் கொத்தி கொத்தித் திண்ண வா! ஆற்று நீரில் குளிக்கிறாய்! அழகாய் துள்ளி ஆடுகிறாய்! சேற்று வயலில் அமர்கிறாய்! திறந்த வெளியில் திரிகிறாய்! உன்னைப் போல பறக்கனும்; உயர உயர செல்லனும்! என்னை அழைத்துச் சென்றிடு; ஏற்ற இடத்தைக் காட்டிடு!