- மூலபாடம் மறைந்து போனது
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- நற்றிணை
ஆனால் நற்றிணை மறைந்த பாடல் இ·தாகலாம் என
ஐயுற்றுக் காட்டப்படும் பாடல்கள் கீழுள்ளன
களவியற் காரிகை பதிப்பித்த பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை
அவர்கள் பக்கம் 129 ல் நற்றிணை ஆகலாம் என இதனை
குறித்துள்ளார். இறையனார் அகப் பொருளுரை சூத்திரம் 28
லும் இ·தே 'அறத்தொடு நிற்றலுக்கு' எடுத்துக் காட்டாக
ஆளப்படுகின்றதாம்
மேலும் 8 அடிகள் மட்டுமே உள்ளமை நோக்த்தக்கது
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அ·து ஆன்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையடு
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே
அதான்று தொலங்காப்பியப் பொருளதிகார உரையில் (களவியல் 23)
நச்சினார்க்கினியர் மேற்கோளன்று நற்றிணை பாடலாக தோற்றுகிறது
அ·து வருமாறு
நெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறை
புதுவை ஆகலின் கிளத்தல் நாணி
நேர் இறை வளைத் தோள் நின் தோழி செய்த
ஆர் உயிர் வருத்தம் களையாயோ என
எற் குறை உறுதிர் ஆயின் சொற் குறை
எம்பதத்து எளியள் அல்லள் எமக்கு ஓர்
கட் காண் கடவுள் அல்லளோ பெரும
ஆய்கொல் மிளகின் அமலை அம் கொழுங் கொடி
துஞ்சு புலி வரிப் புறம் தைவரும்
மஞ் சுசூழ் மணிவரை மன்னநன் மகளே
இவ்விரண்டில் ஏதோ ஒன்று நற்றிணை
மறைந்து போன பாடலாகலாம்