நில் ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் - எல்லா! நீ
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
நில் ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் - எல்லா! நீநாறு இரும் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு; இனி நின் ஆங்கே நின், சே அடி சிவப்பச்,
செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த
குறும்பூழ் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது;
குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்;
புதுவன ஈகை வளம் பாடிக், காலின்
பிரியாக் கவி கை புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,
தபுத்த புலர்வு இல புண்;
ஊரவர் கவ்வை உளைந்து ஈயாய், அல்கல் நின்
தாரின் வாய்க் கொண்டு முயங்கிப், பிடி மாண்டு,
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்
ஈரம் ஆய் விட்டன புண்;
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும்
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம் தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு;
ஆயின், ஆய் இழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய, நின் மெய் தொடுகு;
அன்னையோ! மெய்யைp பொய் என்று மயங்கிய, கை ஒன்று,
அறிகல்லாய் போறி காண், நீ; 95-26
நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றிt, தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள் இனி;
அருளுகம் யாம்; யாரேம்; எல்லா! தெருள?
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் - இன்னும்
விளித்து, நின் பாணனோடு ஆடி, அளித்தி -
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.