ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போலத்தே மூசு, நனை கவுள், திசை காவல் கொளற்கு ஒத்த
வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகம்
படு மழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய
கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும்
பெரு களிற்று இனத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட!
வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்,
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ -
தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர், நின் சாரல்
ஊழுறு கோடல் போல், எல் வளை உகுபவால்?
இனை இருள் இது என ஏங்கி, நின் வரல் நசைஇ,
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ -
'இனையள்' என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர், நின் சுனைக்
கனை பெயல் நீலம் போல், கண் பனி கலுழ்பவால்?
பல் நாளும் படர் அடப், பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன, மாமைக் கண் பழி உண்டோ -
இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள், நின் சோலை -
மின் உகு தளிர் அன்ன, மெலிவு வந்து உரைப்பதால்?
என ஆங்கு,
பின் ஈதல் வேண்டும், நீ பிரிந்தோள் நட்பு - என நீவிப்
பூங் கண் படுதலும் அஞ்சுவல்; தாங்கிய
அரும் துயர் அவலம் தூக்கின்,
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework