கட்டை வச்சேன் மரம் பிளந்தேன்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: இசை
- கல்லாங்காய் விளையாட்டுப் பாடல்கள்
1.
கட்டை வச்சேன்
மரம் பிளந்தேன்
2. ஈரிரண்டைப் போடடா
இருக்க மாட்டைக் கட்டடா
பருத்திக் கொட்டையை வையடா
பஞ்சணேசா.
3. முக்கட்டி வாணியன் செக்காட
செக்குஞ் செக்கும் சேர்ந்தாட
வாணியன் வந்து வழக்காட
வாணிச்சி வந்து கூத்தாட.
4.
நாலை வைச்சு நாலெடு
நாரயணன் பேரேடு
பேரெடுத்துப் பிச்சையெடு
5.
ஐவரளி பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது
பத்தாத மஞ்சள் பசுமஞ்சள
6.
ஆக்குருத்தலம் குருத்தலம்
அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு கட்டால் வெண்கலம
7.
ஏழு புத்திர சகாயம்
எங்கள் புத்திர சகாயம்
மாட்டுப் புத்திர சகாயம் மகராஜி.
8.
எட்டும் பொட்டும்
இடக்கண் பொட்டை
வலக்கண் சப்பட்டை
9.
ஒன்பதுநரி சித்திரத்தை
பேரன் பிறந்தது
பேரிடவாடி பெரியாத்து
10.
பத்திரா சித்திரா கோலாட்டம்
பங்குனி மாசம்ஆடி
வெள்ளiக்கிழமைஅம்மன் கொண்டாட்டம்.
நானும் வந்தேன் நடுக்கட்டைக்கு
என் தோழி வந்தாய் எடுத்தகட்டைக்கு
தட்டில் அப்பம்கொட்ட
தவலை சம்பாக்கொட்ட
ஒத்தைக் கையால் கொட்ட
ஒசந்த மரக்கட்டை
குத்திக் குத்திக் தாரும்
பொட்டலங் கட்டித் தாரும்