அரண்மனையின் சிறப்பு
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல் மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர் ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன் நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம். |
141 |
நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச் சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர் கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே. |
142 |
இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின் மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும் அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன் குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே. |
143 |
முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவு ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன் தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே. |
144 |
சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக் கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார் இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில் செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே. |
145 |
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால் துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணை உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர் பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே. |
146 |
கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய மாழையம் திரள் கனி மா மணி மரகதம் சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால் ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே. |
147 |
மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும் குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும் நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன் கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே. |
148 |
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம் ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே. |
149 |
முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால் சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன இத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே. |
150 |
வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும் கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும் பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும் இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே. |
151 |
கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச் சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன ஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால் காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே. |
152 |
கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும் தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும் மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும் இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே. |
153 |
பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும் காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார் கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர் ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே. |
154 |
கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச் சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால் இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழி வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. |
155 |
ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப் பாடலின் அரவமும் பணை முழவு அரவமும் கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும் வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே. |
156 |