சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச் செப்பகம் கடைகின்றவே போல் தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின் உள் அரங்கி மூழ்கக் காமன் படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப் பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார் புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள் மின்னுப் போல் புலம்பினாரே. |
293 |
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானைத் தான் கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின் எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் ஏற்பச் சொரிந்து அலறி எம் பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப் பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார். |
294 |
கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல் ஆரம் பரிந்து அலறுவார் நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார் நின்று திருவில் வீசும் மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார் கையால் வயிறு அதுக்குவார் ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது என்பார் கோல் வளையினார். |
295 |
பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய் ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத் தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு பிடிகள் போலத் துயர் உழந்து தாம் ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி அடைதும் என்று அழுது போயினார் எம் கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி இனிப் பூவா பிறர் பறிப்பவே. |
296 |