தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றனநீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றனவேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டெனவிரைசெலல் நெடுந்தேர் கடைஇவரையக நாடன் வந்த மாறே.