மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
வெருவரு தானை கொடுசெருப் பலகடந்(து) 5
ஏத்தல் சான்ற இடன்உடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன்உறப் பெற்றவற்(கு)
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்
புரோசு மயக்கி 10
மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய

செல்வக்கடுங்கோ வாழிஆதனைக்
கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: புலாஅம் பாசறை, வரைபோலிஞ்சி, அருவியாம்பல், உரைசால் வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை, மண்ஞெழுஞாலம், பறைக்குரலருவி. இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங்காணம் கொடுத்து நன்றாவென்னும் குன்றேறி நின்று தன்கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework