துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நில்லாத்தானை

வள்ளியை என்றலின் காண்குவந் திசினே
உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி
வீங்(கு)இறைத் தடைஅய அமைமருள் பணைத்தோள்
ஏந்(து)எழில் மழைக்கண் வனைந்துவரல் இளமுலைப்
பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல் 5
மின்இழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண் தீர நாள்தொறும்
உரைசால் நன்கலம் வரை(வு)இல வீசி
அனையை ஆகல் மாறே எனையதூஉம்
உயர்நிலை உலகத்துச் செல்லா(து) இவண்நின்(று) 10
இருநிலம் மருங்கின் நெடிதுமன் னியரோ
நிலந்தப விடூஉம் ஏணிப் புலம்படர்ந்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்
ஏவல் வியம்கொண்(டு) இளையரொ(டு) எழுதரும் 15
ஒல்லார் யானை காணின்
*நில்லாத் தானை* இறைகிழ வோயே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework