கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

ஊணுடை எச்சம் உயர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.

நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயர்மருட்டி யற்று.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework