அவை அடக்கம்
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால் நற்பால் அழியும் நகை வெண்மதி போல் நிறைந்த சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப் பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார். |
4 |
முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும் அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார் இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே பொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார். |
5 |