மதிலின் தோற்றம்
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
தாய் முலை தழுவிய குழவி போலவும் மா மலை தழுவிய மஞ்சு போலவும் ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே. |
100 |
மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின் நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும் தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும் கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா |
101 |
வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள் கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக் கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகை நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே |
102 |
செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும் வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வ அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித் தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே. |
103 |
கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம் குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல் பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும் திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே |
104 |
வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும் வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல் வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே |
105 |