அசோகமரம் வீழ்ந்ததன் பயனைச் சச்சந்தன் கூற, விசயை துன்பம் கொள்ள, சச்சந்தன் ஆறுதல் கூறுதல்
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
இற்று அதனால் பயன் என் என ஏந்திழை உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும் மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து அற்றது ஓர் கோதையின் பொன் தொடி சோர்ந்தாள். |
226 |
காவி கடந்த கண்ணீரொடு காரிகை ஆவி நடந்தது போன்று அணி மாழ்கப் பாவி என் ஆவி வருத்துதியோ எனத் தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான். |
227 |
தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள் கண் மலர்த் தாள் கனவின் இயல் மெய் எனும் பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு எனப் பண் உரையால் பரவித் துயர் தீர்த்தான். |
228 |
காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க் கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத் தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய போது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள். |
229 |