சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை 'விசைப் பொறி ஒன்றைச் செய்க' என அவனும் செய்தல்
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
அந்தரத்தார் மயனே என ஐயுறும் தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன் வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர் எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். |
234 |
பல் கிழியும் பயினும் துகில் நூலொடு நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச் செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே. |
235 |
பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கிய கோல நல் மாமயிலும் கொடு சென்றவன் ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான். |
236 |
நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என மின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர் பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன். |
237 |