கட்டியங்காரன் சினந்து கூறுதல்
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின் வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கிக் கண் எரி தவழ வண்கை மணி நகு கடகம் எற்றா வெண் நகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான். |
258 |
என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார் உன்னலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார் மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான். |
259 |