கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்புஇருவெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல்மதிபுடைப் பதுபோல தோன்றும் நாடவரைந்தனை நீஎனக் கேட்டுயான்உரைத்தனென் அல்லனோ அஃதென் யாய்க்கே.