சிறுதினை கொய்த இருவை வெண்கால்காய்த்த அவரைப் படுகிளி கடியும்யாண ராகிய நன்மலை நாடன்புகரின்று நயந்தனன் போலும்கவரும் தோழிஎன் மாமைக் கவினே.