824) காதம் பலவும் கடந்தபின்காகந்திக் கடிநகருள்
வேதமு மங்கமும் விச்சைகணிலைமையும் வேண்டுநர்கட்
கோதவுங் கேட்பவு முரைத்தலினுலகினு ளறியப்பட்டான்
பூதிக னெனப்படு மந்தணனோத்திடம் புக்கனளே.

825) என்னை யிங்குநும் பொருளெனவினவலு மிவ்விருந்த
வன்னைதன் வரவிதே லாதியிலருமறை யதுமுதலாப்
பின்னைவந் தனகளு மிவையெனப்பையவே யெர்த்துரைத்தான்
முன்னமங் கிருந்தவோர் முதுமகனவைதன் முறைமையினே.

826) நாத்திக மல்லது சொல்லலையாயின்மு னான்பயந்த
சாத்திர மாவது வேதமன்றோவது தான்சயம்பு
சூத்திரி நீயது வல்லையலாமையிற் சொல்லுகிறாய்
போத்தந்தி யோவதன் றீமையென்றான்பொங்கிப் பூதிகனே.

827) பூதிகன் றானது சொல்லலும் யானது வல்லனெல்லாம்
சாதிகண் டாயெனத் தான்றள ராது சாற்றுகென்றாட்
காதியென் றானுமோ ரந்தமென்றானுமுண் டேலதற்கு
நீதியி னாலுரை நீயினி யானது நேர்வ னென்றான்.

828) செய்கையும் புதுமையு முடைமையிற்றிருட்டத்தின் மறுதலையிற்
பொய்யொடும் பொருளொடுங் குவகொடுஞ்சாலவும் பொருந்துதலின்
மையறு மயக்கமு மாற்றொடுகொலைமன்னு மருவுதலின்
ஐயமி றீக்கதிச் செலுத்துவததுவென்னை யாவதென்றாள்.

829) யாரது செய்தவ ரறியிலிங்குரையெனி லங்கொருவ
னூரது நடுவணொ ருஐறயுளில்மலம்பெய்திட் டொளித்தொழியிற்
போ¢னு முருவினும் பெறலிலனாதலின் றாக்குறித்துத்
தோ¢னு மினியது செய்தவரில்லெனச் செப்புவவே.

830) தோற்றமு நாற்றமுஞ் சுவையுடனூறிவற் றாற்றொடங்கி
யாற்றவு மாயிரு வேதம்வல்லார்கள· தறிந்துரைப்ப
மேற்குலத் தாரோ டிழிந்தவரென்பது மெய்ம்மைபெறா
நூற்றிறஞ் செய்தவ ரறிகுவர்நுழைந்தறி வுடையவரே.

831) முயற்சியி னிசைத்தலி னெழுத்தினிற் பதத்தினின் முடிவதனால்
செயற்பட லுடையத னியற்கையிற்செய்தவர் பெயர்பெறலா
லியற்கைய தன்றுநின் வேதமென்றேதுவி னெடுத்துரைத்தாள்
புயற்றிற லிகலிய கூந்தலின்பெயருடைப் புலமையினாள்.

832) கதியவர் தம்பெய ரின்னவைசுட்டின காட்டலினு
முதியவர் நாள்களொ டொப்பிலவிப்பொழு தொத்தலினும்
விதியது வாதலின் வேதத்தையாஞ்சொல்லுங் கீதத்தைப் போற்
புதியது வேயெனச் சொல்லுதுநாமது பொருந்து மென்றாள்.

833) கொல்வது தீதெனப் பொருள்வழிவேள்வியிற் கொலப்படுவ
வெல்லையொன் றிலதென்ப விணைவிழைச்சொழிகென்ப வம்முகத்தாற்
செல்கதி யுளதென்ப தீர்த்துகநெறியென்றுந் தீயவென்று
பல்லவர் துணிவுமெம் வேதத்தினுளவெனப் பயின்றுரைப்ப.

834) சாதிக்கட் பயவா தவப்பயந்தருமெனத் தந்துரைப்ப
வாதிக்க ணான்வழி நால்வரதமைதியை யமர்ந்துரைப்ப
சூதித்த தோற்றமும் பிழைப்பெனச்சூத்திரப் பிறவிகொள்ளார்
வாதித்த வாறென்று தெருண்டவர்க்கிவையிவை மயாமயக்கே.

835) மறுதலை தத்தமு ளாக்கிமயக்கமுஞ் செய்தமையாற்
பெறுதலை யென்னைகொ றத்துவந்தனையன்று பறுமுண்டே
யுறுதியுஞ் சால்பு முடையனயாவையு முண்மையினாற்
செறுதலை யேவில்லை சீர்த்தனசெய்விக்குஞ் சிட்டிதுவே.

836) வசுக்களொ டுருத்திரர் பிதிரரோடிவர்முத லாப்பலர்க்கும்
பசுக்களோ டெருமைகள் குதிரைகள்புலியொடு நாய்முதலா
விசுக்கிழிந் தனபல கொலைகளுமிரங்கலிர் கொன்றவரை
யசிப்பவர் போன்றனி ராயினுமருவினை யாநுமக்கே.

837) தேவரும் பிதிரரும் நுதலிய கொலைகளிற் றீவினைதா
மேவர வல்லன வேண்டுவல் யானென வேண்டுதியேல்
யாவரையு நுதலியு மவரவர் செய்தன வவரவர்க்கே
யாவரி னடையுமவ் வருவினை நுமக்கறி வரியதென்றாள்.

838) ஊட்டுதும் யாமென் றுமர்களைநுதலியோர் சாலைவைத் தால்
வீட்டினங் கிடலின்றி வினைநிலைநுமக்கறி வரியதுபோல்
கூட்டிமற் றவர்களை நுதலியகொலைவினை தங்களையுங்
காட்டுகில் லாரவர் தாமவையறிவதோர் கணக்கிலரே.

839) சிறந்தவர் தங்களுக் கெய்துகசென்றென்னுஞ் சிந்தையரா
யறம்பல செய்தவர்க் கல்லதங்கவர்களுக் காகுமென்றாற்
றுறந்தவர் வீடுபெற்றார்களைநுதலிய தொடர்வினையும்
பிறங்கியிப் பிறவியிற் போக்குமற்றிவையென்ன பேதைமையே.

840) நண்பரை நுதலியும் பகைவரைநுதலியு மமிர்தொடுநஞ்
சுண்பவர்க் கல்லதற் கவர்களுக்காமென வுரைக்குநர்யார்
பண்பிலி தேவரை றுதலியகொலையினிற் பல்வினைதா
னுண்பல வகையினி னடைந்தவைவிளையுங்க ணுமக்குமென்றாள்.

841) கொன்றவர்க் கல்லது நுதலப்பட் டார்களைக் கூடலவேற்
றின்றவர்க கியாவையுந் தீவினைசேரல தேவர்க்குப்போ
லென்றுரைப் பாய்க்கெய்து மேழைமையுண்குவ வேலிமையார்க்
கொன்றுவி யேனல னோவினையூன்றின்பவர்க் கொப்பவென்றாள்.

842) ஈகளு நாய்களுங் கொன்றவரீவகண் டின்புறலிற்
றீயவை யேசெய்யுந் தேவரத்தீவினை தீர்க்கிற்பவோ
நோய்களும் பேய்களு மொழிக்குவமெனினவை நுங்களுக்கு
மாய்விடி னுணரின· தாம்வினையகற்றுதற் கரியதென்றாள்.

843) நம்முறு துன்பங்க ணாமொழிக்கல்லலம் பிறருறுப
வெம்முறை யாயினும் போக்குதற்கரியவிங் கிவர்களைப்போற்
றம்முறு துன்பமும் தாமொழிக்கில்லலர் பிறர்களையே
லெம்முறை நோய்களுஞ் செய்குபவவரென விகழ்ந்தனளே.

844) நாங்கொன்று கொடுக்குமவ் விலங்கினைநலிவதோர் பசியினரேற்
றாங்கொன்று தின்குவ ராய்விடினவர்களைத் தவிர்க்குநர்யார்
தீங்கொன்று முரையன்மின் தேவர்தம்மூணினைச் சேணின்றுதாம்
வாங்குத லல்லது முடையொடுசோறுண்ணும் வயிற்றினரே.

845) - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.

846) - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.

847) - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.

848) - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.

849) - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.

850) - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.

851) - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.

852) பொய்த்துரை யாநன்மை போதுவ தேலில்லை பூதிகனே
சத்திய மேயுரை நீயெனத் தானும· தேயுரைத்தா
னெத்திசை யார்களு மேத்துதற் கேற்றன னிவனுமென்றார்
தத்துவ ரேநின்று தத்துவ ரெனப்படுந் தன்மையினார்.

853) நன்பொரு ளாவன விவையெனவவனோடு நகரத்துள்ளா
ரின்புறும் வகையினி னெடுத்தன ளுரைத்தபின் விடுக்கலுற்றாட்
கன்புபட் டவர்களு மறநெறியறிவித்த வார்வத்தினாற்
பின்புசென் றொழிதுமென் றதுசெய்துவலங்கொண்டு பெயர்ந்தனரே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework