அரும்பொருள் வேட்கைய மாகிநின் துறந்துபெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத்தவநனி நெடிய வாயின இனியேஅணியிழை உள்ளியாம் வருதலின்அணிய வாயின சுரத்தைடை யாறே.