வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைகானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்தண்ணந் துறைவன் கண்டிக்கும்அம்மா மேனிஎம் தோழியது துயரே.