பழனப் பன்மீன் அருந்த நாரைகழனி மருதின் சென்னிச் சேக்கும்மாநீர்ப் பொய்கை யாணர் ஊரதூயர் நறியர்நின் பெண்டிர்பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே.