கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்சுரும்புபசி களையும் பெரும்புன லூரபுதல்வனை ஈன்றஎம் மேனிமுயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே.