ராகம் கன்னட
தாளம் - ஆதி

பல்லவி

ராஜ ராஜேஸ்வரீ மாதங்கி நதஜனாவன சுபகரி சங்கரி
நவ பர்வாயுத கீதரத சோபாலங்க்ருத மணிமண்டப வாஸினி
ராசர பண்டாஸுர சேதினி ரவிசந்த்ர குண்டல லோலோலாஸினி

அனுபல்லவி

ஸ்ரீ ஜகன்நாயகி ஸஹஸ்ரார திவ்ய தள பத்ம மத மதுகரி
த்ரிபுவன மஹதானந்த காரிணி சிவஹருதயானந்த கேளினி
சந்தான வாடிகாதிபஞ்சக த்ரோத்யான வனசாரிணி மாமவ

சரணம்

சிந்தாமணி பீடநிலயே சிதானந்த பர கருணாலயே
மந்தார ஸௌரபாதிசய மாலினி மரகத வலயே
நந்தானந்த தனயே சிவ நவநீதே ஸ்வரஹருதயாலயே

மத்யம கால ஸாஹித்யம்

நிந்தித பந்தூக சௌரபாருண தருணாதர விமலே ஜயஜய
நிருபமாதிக சிதம்பர நர்த்தன ஸஹ நர்த்தன பதயுகளே மாமவ

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework