ராகம் அமீர் கல்யாணி
தாளம் - ஆதி

பல்லவி

அமுதனுக்கமுதூட்டும் யமுனையாறே உன்போல தவம் செய்தார் யாரே அமு

அனுபல்லவி

குமுத மலரன்ன விழியாலே குழியும் கன்னப் புன்னகையாலே
சுமுகமான இளம் மொழியாலே

மத்யமகால ஸாஹித்யம்

தோணு முன்னமான பொருள் யாவையும்
வேணு கானமோடு றுகும்படி மாறாதமுதனுக் (அமு

சரணம்

நினைந்தாலும் நெஞ்சத்தமுதூட்டும் எங்கள் நீலவண்ண கண்ண மன்னன் தன்னை
நினைந்து நினைந்தமுது ஊட்டுதியோ முனெக்காலும் கண்டறியா தவநிலை
மோனமான வானவர்க்கும் ஏதென முனைந்து முனைந்து நீ காட்டுதியோ

மத்யமகால ஸாஹித்யம்

தனக்கெனாத தன்மையும் தவமும் பிறவிக் குணமோ பொதுவோ
தானுண்ணுகாலை ஊனுண்ண வைக்கும் தன்மையென்பார்கள் அதுவோ
அனைத்துலகும் மயங்க வந்தொரு குழல் ஆறு மிசையாளன் இவனோ
அள்ளிப் பருகுவதவனோ நீயோ சொல்லிச் சுவை தரும் மாறா அமு

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework