செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல் எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப் பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான் பூமகளை எய்தினானே.