பெருமை
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- நாலடியார்
181. ஈத லிசையா திளமைசேண் நீங்குதலால்
காத லவரும் கருத்தல்லர் - காதலித்து
ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.
182. இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார் - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பாவ திலர்.
183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
இன்றிப் பலவு முள.
184. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர் - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பொயார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அது.
185. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லுற் றுழியூறும் ஆறேபோல் - செல்வர்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்காற்றிச்
செய்வர் செயற்பா லவை.
186. பெருவரை நாட பொயோர்கட் டீமை
கருநரைமேற் சூடேபோல் தோன்றும் - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
187. இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
பசைந்த துணையும் பாவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
188. மெல்லிய நல்லாருள் மென்மை அதுவிறந்(து)
ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை - எல்லாம்
சலவருட் சாலச் சலவே நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
189. கடுக்கி யொருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிப் பொன்றின்றித்
துளக்க மிலாதவர் துய மனத்தார்
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
190. முற்றுற்றும் துற்றினை நாளும் அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர் - அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.