251. நுண்ணுணர் வின்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.

252. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்ல லுழப்ப தறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலால் சேராளே
பூவின் கிழத்தி புலந்து.

253. கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.

254. கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ஡஢டைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.

255. புல்லாப்புன் கோட்டிப் புலவ ஡஢டைப்புக்குக்
கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.

256. கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொலி.

257. பன்றிக்கூழ்ப் பத்தா஢ல் தேமா வடித்தற்றால்
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு.

258. பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று
கோலால் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு.

259. பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறு஡உம் ஈப்போல், - இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.

260. கற்றா ருரைக்கும் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ் சுதைத்தலால் - மற்றுமோர்
தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework