அணி முகம் மதி ஏய்ப்ப அம் மதியை நனி ஏய்க்கும்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
அணி முகம் மதி ஏய்ப்ப அம் மதியை நனி ஏய்க்கும்மணி முகம்; மா மழை, நின் பின் ஒப்ப, பின்னின் கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவுக் கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,
அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும்
விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை! எமக்குப்
பெரும் பொன் படுகுவை பண்டு;
ஏஎ! எல்லா, மொழிவது கண்டை, இ·து ஒத்தன்; தொய்யில்
எழுதி இறுத்த பெரு பொன் படுகம்?
உழுவது உடையமோ, யாம்?;
உழுதாய்;
சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இ·தோ,
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த
குவளையும், நின் உழவு அன்றோ? இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல,
என் உழுவாய் நீ, மற்று இனி?
எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு;
முற்று எழில் நீல மலர் என உற்ற,
இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம்,
பெரும் பொன் உண்டு என்பாய்! இனி;
நல்லாய்! இகுளை! கேள்;
ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின்,
வேந்து கொண்டன்ன பல;
ஆங்கு ஆக! அத்திறம் அல்லாக்கால், வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ
முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம்
உத்தி எறிந்துவிடற்கு.